கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருபத்தி நான்கு கோடியே மூன்று லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் சந்தேகநபர் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை கைது செய்யப்பட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் போதைப்பொருள் 04 கிலோ 855 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர் 59 வயதான பிரேசிலிய ஆசிரியர் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது பயணப் பொதியில் போதைப் பொருளை சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.