பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பாடாசாலை பஸ்ஸினை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் நான்கு பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
குஸ்டார் மாவட்டத்தில் பாடசாலை பஸ்ஸை குறிவைத்து ஜீரோபொயின்ட் என்ற பகுதியிலே இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் காயமடைந்தவர்களையும் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் காயமடைந்தவர்களை குவட்டா கராச்சிக்கு கொண்டு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வெடிப்பின் தீவிரம் காரணமாக இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.