பறிபோகுமா ட்ரம்பின் ஜனாதிபதி பதவி!

அமெரிக்காவில் வரிக்குறைப்பை அமுல்படுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

எலாக் மஸ்க் தற்போது கூறியருப்பதாவது, எம்.பி.க்கள் சட்டமூலத்தை படித்துவிடக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நான் உதவியிருக்காவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் தோற்றிருப்பார்.

டிரம்ப் நன்றி கெட்டவர். சிறார் பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டிரம்பின் பெயர் இருப்பதாலேயே அவர் அதனை வெளியிடவில்லை.

நாசா உடனான டிராகன் விண்கலன் ஒப்பந்தத்தை ரத்து செய்கிறேன் என தெரிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.

இதனால் டிரம்புக்கு நெருங்கிய நண்பராகவும், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் டாஸ் துறைக்கும் தலைமை வகித்தார். இதன்பின், டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விரைவில் விலகுவதாக மஸ்க் அறிவித்தார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே பிரிவு உண்டானதை அடுத்து ஜனாதிபதி டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேண்டும் என்று மஸ்க் வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்