பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், 34 பேர் காயமடைந்தனர்.
தம்புத்தேகமவிலிருந்து பதுளைக்கு யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
அவர்கள் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று மாலை 06 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, மேலும் பதுளை பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.