பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக, 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சிற்கும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சரான கலாநிதி ஹர்சண சூரியப்பெரும, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராகவும், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராகவும், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பாதுகாப்பு பதில் அமைச்சராகவும், வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க