பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன் பெரஹெராவின் நூற்றாண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்றார்.

வரலாற்று சிறப்புமிக்க எத்கந்த ரஜமகா விஹாரையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரீ தலதா பொசொன் பெரஹெரா 1925 ஆம் ஆண்டு தொடங்கியதுடன், இந்த நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் தபால் அட்டையும் இங்கு வெளியிடப்பட்டது.

எத்கந்த விகாரையின் பொசொன் பெரஹெரவின் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கி வைத்தார்.

ஆன்மீக ரீதியில் வீழ்ச்சிகண்ட சமூகத்தை பௌதீக ரீதியாக நாம் எவ்வளவு அபிவிருத்தி செய்தாலும் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை எனவும் நெறிமுறை மற்றும் ஆன்மீகப் பண்புகளைக் கொண்ட பிரஜைகளால் மாத்திரமே, நாட்டின் கலாசார சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பணம் அல்லது அதிகாரத்தினால் வாழ்வை இழந்த சமூகத்திற்கு, ஆன்மீக வாழ்வளிக்க, பௌத்த கலாசாரம் வலுவான அடித்தளத்தை வழங்குகின்றது என்று இங்கு ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஆட்சியாளர்கள் மக்களை நேசிப்பது போல், மக்களுக்கும் பொறுப்புக்கூறலை உருவாக்குவதற்கு பௌத்தம் வழி காட்டியுள்ளது என்றும், இன்றைய சமூகத்தில்

பெறுமதிமிக்க கலாசார விடயங்கள் விடுபட்டுள்ளதாகவும், மீண்டும் அந்த புராதன கலாசார பொக்கிஷங்களை கொண்டுவந்து ஆன்மீக வாழ்வுடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் பெரஹெரா நிறுத்தப்படும் என சிலர் கூறினாலும், கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மல்வத்து தரப்பின் அநுநாயக்க வண, நியங்கொட ஸ்ரீ விஜிதசிறி தேரர் மற்றும் எத்கந்த ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வண. ஆனமடுவே சத்தர்மகீர்த்தி ஸ்ரீ ரதனபால பத்தரக்கித தேரர் உட்பட மகாசங்கத்தினர்கள்,வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால,கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

07.17.01

ராஜபக்‌ஷர்களுடன் வம்பிலுத்த கனேடிய மாகாண முதல்வருக்கு கொலை மிரட்டல்!

பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டலுக்கு இலக்காகி இருந்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக