பங்களாதேஷில் இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2026ம் ஆண்டு ஜூன் வரை இடைப்பட்ட காலத்தில், எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தப்படலாம் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அறிவித்தார்.
பங்களாதேஷில் புதிய தேர்தல்களுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2026ம் ஆண்டு ஜூன் வரை, இடைப்பட்ட காலத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தப்படலாம் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அறிவித்தார்.
அவர், டோக்கியோவில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இது தொடர்பாக, முகமது யூனுஸ் பேசியதாவது: பங்களாதேஷில் அரசு தேர்தல் மற்றும் நிர்வாக சீர்திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகள் விரைவில் முடிவடையும். இந்த சீர்திருத்தங்களின் வேகத்தைப் பொறுத்து பங்களாதேஷில் இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2026 ஜூன் வரை, இடைப்பட்ட காலத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தப்படலாம்.
தேர்தல்கள் நடக்கும்போது, தேர்தல் அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைப்போம். அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைப் பெறுவதற்கு மிகவும் பொறுமையற்றவர்களாக இருப்பதால், தேர்தல்கள் எப்போது என்று அவர்களிடம் சொல்ல மக்கள் வலியுறுத்துகிறார்கள். மக்களுக்கு நான் வாக்குறுதி அளித்து வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.