கனடாவின் தடையாற்றல் மேம்படுத்தப்படும் அதாவது, அமெரிக்க ஜனாதிபதியுடன் நடைபெறவிருக்கும் சந்திப்பின்போது கனடாவின் உரிமையை பாதுகாத்தல் மூலம் உள்நாட்டு வர்த்தக தடைகளுக்கு ஜூன் மாதத்திற்குள் தீர்வு கிட்டுமெனவும் உறுதியளித்தார்.
கனடாவின் வருமானம் பொருளாதாரம் வருமானம் மற்றும் வேலைவாய்ப்புக்களை பலப்படுத்தி ஒற்றை பொருளாதாரத்தை கனடாவில் கட்டமைப்பதாகவும் உறுதியளித்தார். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் நீண்ட காலம் தொடர்ந்தாலும் அமெரிக்காவின் நட்பை புதுப்பிக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் இருப்பதையும் கூறியிருந்தார்.
அருகில் பகையாளியை வைத்திருப்பது கனடாவின் பொருளாதாரத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்தோடு மே மாதம் 12 ஆம் திகதி கனடாவின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என்றும், முன்னாள் பிரதமர் ட்ரூடோவின் பாலின சமத்துவ கொள்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் கனடாவின் பாராளுமன்ற அமர்வுகளில் மன்னர் சார்ளஸ் பங்கெடுப்பார் என்பதையும் பிரதமர் மார்க் கார்னி உறுதிப்படுத்தினார்.
அதேபோல் கனேடிய தினத்திலிருந்து வருமான வரி விகிதம் ஒரு சதவீத்த்தினால் குறைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், ஒரு மில்லியன் பெறுமதிக்கும் அதிகமான வீடுகளுக்கான ஜீஎஸ்டி வரி குறைக்கப்படவுள்ளதுடன், எட்டு மில்லியன்களுக்கும் அதிகமானவர்களுக்கு பல் சிகிச்சைக்கான திட்டங்கள் விரிவாக்கப்பட உள்ளதெனவும் உறுதிப்படுத்தினார்.
பில்ட் கனடா என்ற திட்டத்தின் கீழ் பொருத்த வீட்டு திட்டத்தை ஊக்குவிக்க எதிர்பார்ப்பதாகவும், இதனால் வீடுகளுக்கான தட்டுப்பாடும் வாழ்க்கை செலவு பிரச்சினையும் கட்டுப்பாட்டுக்கு வருமென எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
அதனையடுத்து கனேடிய பொலிஸ் சேவையில் மேலும் 1000 பேரை இணைத்துக்கொள்ளவிருப்பதாகவும், வாகன திருட்டு போன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவோரை தொடர்ச்சியாக சிறையில் வைப்பதற்கான வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் அறிவித்தார். இதனால் 30 பில்லியன் அமெரிக்க டொலர்களால் கனடாவின் பாதுகாப்பு செலவீனங்கள் உயர்வடையும் என்றும் கூறினார்.
மேலும் மொத்த தேசிய உற்பத்தியில் 2 சதவீதத்தினை பாதுகாப்புக்கான ஒதுக்க இருப்பதாகவும், இறுதியாக சர்வதேச மாணவர்கள் மற்றும் குடியேற்றவாசிகளை தக்கவைக்கும் சதவீத்த்தினை 5 ஆக குறைக்கவுள்ளதாகவும் அறிவித்தார்.