நேபாளத்தில் இன்று (06) காலை 8.21 மணியளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது சொத்து சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த ஜூன் 29 அன்று நேபாளத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளதாக குறித்த மையம் (NCS) தெரிவித்துள்ளது.