நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளில் நுளம்பு பெருகும் அபாயம்!

நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தின் கடந்த மூன்று நாட்களில்,நுளம்பு இனப்பெருக்கம் செய்யக்கூடிய 121 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

எட்டு மாவட்டங்களில் உள்ள அதிக ஆபத்துள்ள சுகாதார மருத்துவ அதிகார பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் ஆலோசகர் வைத்தியர் அனோஜா தீரசிங்க குறிப்பிட்டார்.

இதற்கமைய 229 பாடசாலைகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், 29 பாடசாலைகளில் நுளம்பு பரவும் நிலை அடையாளம் காணப்பட்டது.

இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்பதால், பாடசாலை நிர்வாகிகளும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் நுளம்பு பெருக்கத்தைத் தடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தின் ஆறாவது நாளான ஜூலை 5 ஆம் திகதி 19,774 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மொத்தம் 5,085 வளாகங்கள் நுளம்புகள் பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டதாகவும், 567 வளாகங்களில் நுளம்பு பெருகி இருப்பது கண்டறியப்பட்டதாகவும் வைத்தியர் தீரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக

5480e5b4-dfa4-4a08-8cf0-c65a4c6f2f28

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை – எம்.பிக்கள் குற்றச்சாட்டு!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன்,