இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு கொழும்பில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.
பிரதம நீதியரசர், ஜனாதிபதி வழக்கறிஞர் முர்து பெர்ணாந்து, சட்டமா அதிபர், ஜனாதிபதி வழக்கறிஞர் பரிந்த ரணசிங்க, மேலதி சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி வழக்கறிஞர் நெரின் புல்லே, இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் மற்றும் ஐ.நா. அதிகாரிகள் குழுவும் இதில் கலந்து கொண்டனர்.