நியூசிலாந்தின் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், மே 24 முதல் 28 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, துணைப் பிரதமர் பீட்டர்ஸ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார். வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெரத்துடன் உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடுவார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம், கல்வி, இணைப்பு, சுற்றுலா மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தியோகபூர்வ நிகழ்வுகளுக்கு மேலதிகமாக, தனியார் துறை மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகளுடன் துணைப் பிரதமர் பீட்டர்ஸ் பல சந்திப்புகளில் பங்கேற்கவுள்ளார்.
அவருடன் நியூசிலாந்தின் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் மூன்று சிரேஷ்ட அதிகாரிகளும் வரவுள்ளனர்.