இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று திங்கட்கிழமை சந்தித்தார்.
வர்த்தகம், முதலீடு, கல்வி, விவசாயம், சுற்றுலா மற்றும் விளையாட்டு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பு இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.