நாளுக்கு நாள் மோசமடையும் தேசிய பாதுகாப்பு – எதிர்க்கட்சிகள் விசேட கலந்துரையாடல்!

நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில், எதிர்க்கட்சி கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கிடையே விசேட கலந்துரையாடல் இன்று (20) காலை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான, கயந்த கருணாதிலக, சிவஞானம் ஸ்ரீதரன், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், கே. காதர் மஸ்தான், திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ஜே.சி. அலவத்துவல, கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, டாக்டர். பி. சத்தியலிங்கம், நிஸாம் காரியப்பர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த சூழ்நிலையில் நாட்டு மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பொதுச் சேவையை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பாக மீண்டும் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக காலையில் சபாநாயகரைச் சந்திக்க எதிர்க்கட்சி கட்சித் தலைவர்கள் முடிவு செய்தனர். குறித்த சந்திப்பின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பணிகளை பாராளுமன்றத்திலும் வெளியிலும் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் மேற்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்கும் பொறுப்பும் கடமையும் சபாநாயகருக்கு உள்ளதை வலியுறுத்த வேண்டும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

எழுந்துள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு பொலிஸ்மா அதிபரையும், பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளரையும் உடனடியாக பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் கோர வேண்டும் என கட்சித் தலைவர்கள் முடிவு செய்தனர். அதன்படி சபாநாயகரைச் சந்தித்த கட்சித் தலைவர்கள் குறித்த முடிவுகள் மற்றும் யோசனைகள் குறித்து சபாநாயகருக்கு தெரிவித்தனர்.

Modi (1)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப்

495270405_919110200343581_3972143963487025502_n

கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்!

எகொட உயன பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்று மீள கரைக்குத் திரும்பிய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு

btOCP9w

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான பொறிமுறை குறித்து கலந்துரையாடல்!

இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு