நாளாந்த கடவுச்சீட்டு விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது ஒரு நாளைக்கு வழங்கப்பட்டுவந்த 1200 அளவிலான கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையை 4000 வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதியிலிருந்து குடிவரவு ககழ்வு திணைக்கலாம் 24 மணி நேர சேவையை ஆரம்பித்ததாகவும் விமான கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் ஒருநாள் சேவையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவசரமாக கடவுச்சீட்டு அவசியமாயின் ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு கோரிக்கை விடுக்க முடியும்.

புதிய கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்காக நாளாந்தம் 3000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுவதாகவும் புதிய கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கு 356,714 விண்ணப்பங்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

பயணக் கடவுச் சீட்டு பற்றாக்குறை காரணமாக கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இருந்து இக்கடவுச் சீட்டுகளை விநியோகிப்பதில் தாமதம் காரணமான பற்றாக்குறையினால் 349,483 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அதில் 303,483 விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்