கடந்த மே மாதம் வெளியான டுவரிஸ்ட் பெமிலி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருந்தார். இவர் தற்போது நாயனாக களமிறங்கியுள்ளார்.
இவரது ‘டுவரிஸ்ட் பெமிலி’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் குவித்தது.
முதல் படத்திலேயே பாராட்டுகளை பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அடுத்து எந்த நடிகரை வைத்த படம் இயக்குவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அபிஷன் ஜீவிந்த் கதாநாயகமான அறிமுகமாகும் படத்தை ‘டூரிஸ்ட் பேமிலி’யின் இணை இயக்குநர் இயக்க உள்ளதாகவும் இப்படத்தின் கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வர ராஜன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு, “கரெக்டட் மச்சி” என பெயரிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.