நாடாளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை!

இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கில் பாராளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன், நாடாளுமன்றத்தில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சைகை மொழியிலான உரைபெயர்ப்பை மேலும் விஸ்தரிப்பதற்கும் நாடாளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய இயலாமையுடைய பொதுநலவாய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலதன முதலீட்டு நிதியத்தின் (Commonwealth Parliamentarians with Disabilities (CPwD) Capital Investment Fund) அனுசரணையுடன் நாடாளுமன்றக் குழு அறைகள் 5 மற்றும் 6 ஆகியவற்றில் சைகைமொழியிலான உரைபெயர்ப்பு வசதிகள் வழங்கப்படவுள்ளன.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்