நடுவீதியில் குழிக்குள் விழுந்தது கார்!

பிரதான வீதியில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், காருக்குள் இருந்த ஐ.டி. ஊழியர் குடும்பத்துடன் உயிர் தப்பினார்.

சோழிங்கநல்லூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி, சனிக்கிழமை (17) மாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாடகை காரில் சோழிங்கநல்லூரை சேர்ந்த ஐ.டி. ஊழியரான விக்னேஷ் (45) என்பவர் மனைவி தன்யா (40) மற்றும் குடும்பத்தினர் அக்ஷயா (12). அத்வைத் (9) ஆகியோர் பயணித்தனர். காரை மரியதாஸ் (47) என்பவர் ஓட்டினார்.

டைடல் பார்க் சந்திப்பு ஓஎம் ஆர் சாலையில் (இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே) சென்று கொண்டிருந்த போது. திடீரென் வீதியின் நடுவே சுமார் 10 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட் டது. இந்த பள்ளத்துக்குள் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. காருக்குள் இருந்த 5 பேரும் கூச்சலிட்டனர். தகவல் அறிந்து போக்குவரத்து பொலிஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர்.

கிரேன் மூலம் காரை தூக்கி அப்புறப்படுத்தினர். காருக்குள் இருந்த 5 பேரும் கண்ணாடியை உடைத்து அடுத்தடுத்து மீட்கப் பட்டனர். விபத்தில் கார் ஓட்டுநர் மரியதாசுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப் பினர். அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே, வீதியில் ஏற் பட்ட பள்ளத்தை சுற்றி தடுப்பு வேலிகள் போடப்பட்டது. இதனால், அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திடீர் பள்ளத்துக்கான காரணம் என்ன என்று தரமணி பொலிஸார் வழக்கு பதிந்து விசா ரித்து வருகின்றனர்.

திடீர் பள்ளம் தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதி காரிகள் கூறும்போது. “விபத்து ஏற்பட்ட பகுதியில் 2.2 மீ விட்டம் கொண்ட ராட்சத கழிவு நீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் வழி யாகத்தான் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழி வுநீர் பெருங்குடியில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது . அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வரு கின்றனர்” என்றனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”மெட்ரோ ரயில் பணி நடை பெறும் இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் திருவான்மியூர் – தரமணி இடையே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள் ளம், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் எந்த பணியுடணும் தொடர் புடையது அல்ல என்பதை உறு திப்படுத்துகிறோம். அந்த பகுதி யில் அமைக்கப்பட்டுள்ள 2.2 மீ விட்டம் கொண்ட கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக. பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

donald-trump

ஈரானால் அதன் அணு ஆயுத கட்டமைப்பை சீரமைக்க முடியாது!

கடந்த 13ம் திகதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், அணு உலைகள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், மசகு

IMG-20250624-WA0013

“பிரஜாசக்தி” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஜூலை 04 ஆம் திகதி ஆரம்பம்!

சமூகத்தை வலுவூட்டல் மற்றும் பொருளாதார நன்மைகளை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுதலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “பிரஜாசக்தி” தேசிய

IMG-20250624-WA0012

வெலிகந்த, நெலும்வெவ வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பகுதியை அபிவிருத்தி செய்யத் திட்டம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, வெலிகந்த நெலும்வெவ பிரதேசத்தில் உள்ள வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பிரதேசத்தை அபிவிருத்தி