நடுவானில் தொழில்நுட்ப கோளாறு – ஸ்ரீலங்கன் விமானம் பாதியில் தரையிறக்கம்!

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மெடான் விமானநிலையத்தில் அவசரஅவசரமாக தரையிறங்கியது.

கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு நேற்று பயணித்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நடுவானில் விமானம் இந்தோனேசியாவிற்கு திருப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானத்தை பரிசோதித்த இந்தோனேசிய தொழில்நுட்பவியலாளர்கள் தொழில்நுட்ப கோளாறினை சரி செய்வதற்கு மேலதிகநேரம் தேவைப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இலங்கையிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் தொழில்நுட்ப குழுவினர் இந்தோனேசியா சென்றுள்ளனர்.

இதேவேளை இந்தோனேசியாவில் சிக்குண்டுள்ள பயணிகளை சிங்கப்பூர் கொண்டு சென்று சேர்ப்பதற்காக இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன்எயர்லைன்ஸ் விமானமொன்று இந்தோனேசியா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை தாம் நீண்டநேரம் காத்திருக்கவேண்டியுள்ளதாகவும்,போதிய வசதிகள் இல்லை போதிய தகவல்கள் இல்லை என இந்தோனேசியாவில் உள்ள குறிப்பிட்ட விமானத்தின் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

 

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு