நடிகை ஷோபனா உள்ளிட்ட 68 பேருக்கு பத்ம பூசண் விருதுகள்

இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குருவாயூர் துரை, புதுச்சேரியை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மொத்தமாக 68 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்கப்பட்டன.

கல்வி, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகள் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி அறிவிக்கப்பட்டன. இதன்படி பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

முதல்கட்டமாக கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி 71 பேருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார். மீதம் உள்ள 68 பேருக்கு நேற்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பத்ம பூஷண் விருது தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோபனா சந்திரசேகர், தொழிலதிபர் நல்லி குப்புசாமி மற்றும் பிபக் தேப்ராய், கைலாஷ் நாத் தீக்சித், ஜாலின் கோஸ்வாமி, மனோகர் ஜோஷி (மறைவு), ஆனந்த் நாக், சாத்வி ரிதம்பரா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

images (11)

தேசபந்துவின் துர்நடத்தை தொடர்பாக மேலும் நால்வர் சாட்சி!

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம்

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்