நடிகர் ராஜேஷ் காலமானார்!

பிரபல நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்தவர் நடிகர் ராஜேஷ். இவர் நடிப்பில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும் பல சின்னத்திரை தொடர்களும் வெளியாகியிருக்கின்றன.

அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர், ’கன்னிப் பருவத்திலே’ படம் மூலம் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். நடிகர் விஜய் சேதுபதியின் தர்மதுரை திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிப்பைத் தாண்டி ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்டவரான இவர், அத்துறையிலும் கவனம் பெற்றவராகவே இருந்தார்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராஜேஷ் இன்று காலை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்ததார்.

75-வயதான ராஜேஷ் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Modi (1)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப்

495270405_919110200343581_3972143963487025502_n

கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்!

எகொட உயன பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்று மீள கரைக்குத் திரும்பிய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு

btOCP9w

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான பொறிமுறை குறித்து கலந்துரையாடல்!

இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு