தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்!

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்.சி.பி 20 ஓவரில் 213 ஓட்டங்கள் குவித்தது. விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட் அரை சதமடித்தனர்.

தொடர்ந்து ஆடிய சென்னை அணி 211 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்.சி.பி. அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், தோல்விக்கு பிறகு அணி தலைவர் தோனி பேசியதாவது:

நான் துடுப்பாட்டம் செய்யத் தொடங்கியபோது தேவையான பந்து வீச்சுகள் மற்றும் ஓட்டங்கள் இருந்தது. அழுத்தத்தைக் குறைக்க இன்னும் சில ஷாட்களை மாற்றியிருக்க வேண்டும் என நினைத்தேன். தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

பந்துவீச்சில் இன்று சொதப்பி விட்டோம். கடைசி கட்டத்தில் ஷெப்பர்ட் சிறப்பாக விளையாடினார்.

எல்லா துடுப்பாட்ட வீரர்களும் யோர்க்கரில் விளையாடவில்லை. நவீன யுகத்தில் வீரர்கள் பயிற்சி செய்ய வேண்டிய ஒன்று. ஆனால் எங்கள் பெரும்பாலான வீரர்கள் அதை விளையாட வசதியாக இல்லை. ஜடேஜா சிறப்பாக விளையாடுகிறார்.

துடுப்பாட்டம் என்பது நாங்கள் சற்று பின்தங்கிய ஒரு பகுதியாகும். ஆனால் இன்று ஒரு துறையாக துடுப்பாட்டம் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன் என தெரிவித்தார்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த