தோல்விக்காக உணர்ச்சி வசப்படுவதில் பிரயோசனம் இல்லை!

மும்பையில் நேற்று நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவரில் 176 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு விளையாடிய மும்பை அணி 177 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் 6ஆவது தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில், தொடர் தோல்விக்கு பிறகு சென்னை அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளதாவது,

அணியில் எதுவும் சரியாக செல்லாத நிலையில் அதற்காக உணர்ச்சி வசப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஒருவேளை நாங்கள் தகுதியாக முடியாத சூழல் இருந்தால் அடுத்த சீசனுக்கு சிறந்த லெவனை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த 2020 ஐ.பி.எல். சீசனும் எங்களுக்கு மோசமான சீசனாக இருந்தது. அதிலிருந்து எப்படி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.

வீரர்களை மாற்றுவதில் அதிகமாக விருப்பம் காட்ட வேண்டியதில்லை. அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்தாலே போதுமானது.

மேலும், நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மும்பை அணிக்கு வாழ்த்துகள் எனவும் தெரிவித்தார்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க