தேர்தல் வேட்பாளர்களுக்குச் சம்பளம்! – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் கல்வித் திணைக்களத்தில் பணியாற்றும் அரச ஊழியர்கள் பலர் ஏப்ரல் மாத ஊதியத்தை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறு ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை கல்விசாரா பணியாளர்கள் மற்றும் கல்வித் திணைக்களத்தில் பணிபுரியும் 400க்கும் மேற்பட்டோர் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும்,

‘‘இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாயின் பணிக்குழாமிலுள்ள அதிகாரிகள் தமது பணியை இராஜிநாமாச் செய்யவேண்டும். பணிக்குழாமுக்கு உட்படாத அதிகாரிகள் ஊதியம் இல்லாத விடுமுறையை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவீதமானோர் இச்சட்டத்தை மீறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான வேட்பாளர்களின் வங்கிக் கணக்குகளில் ஏப்ரல் மாதத்துக்கான ஊதியம் வைப்பிலிடப்பட்டுள்ளன. இவ்வாறு வடமத்திய மாகாணத்தில் போட்டியிடும் 48 வேட்பாளர்களில் அறுவர் மட்டுமே விடுப்புக்கான அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளனர். இது தேர்தலில் தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் சில அதிகாரிகள் கூட்டங்களிலும் கலந்துகொண்டு தங்களின் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தல்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் பணியிலிருந்து கூட நீக்கப்பட்டனர். அதேபோன்று இது தேர்தல் சட்டம் மற்றும் நிறுவன ஒழுங்குவிதிகளை மீறும் செயற்பாடாகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் சம்பளம் பெறுவதும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை பெற்றுக்கொள்கின்றமை சிக்கலுக்குரிய விடயமாகுமென்று அநுராதபுரம் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ரஞ்சித் விமலசூரியவிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும்,

‘‘தேர்தல் சட்டத்தின்படி, இவ்வாறான வேட்பாளர்களின் வேட்புமனுவை இரத்துச் செய்ய முடியும். குறித்த திணைக்களத்தினூடாக தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு இவ்வாறு தவறுதலாக ஊதியம் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தால், குறித்த வேட்பாளர் உடனடியாக அத்தொகையை திணைக்களத்திடம் மீளளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்