முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்கம் செய்வது தொடர்பிலான விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுத் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.