தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (05) நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 457 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 7:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இந்த சோதனை நடத்தப்பட்டது.
பொலிசார், சிறப்பு அதிரடிப்படை, இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படை வீரர்கள் சுமார் 1500 பேர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, மொத்தம் 3,288 நபர்களும் 1,365 வாகனங்களும் சோதனை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிடியாணை பிறப்பிக்கப்படவிருந்த 65 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்திய 66 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தென் மாகாணத்தில் உள்ள மூன்று பொலிஸ் பிரிவுகளில் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.