தென் சூடானின் பேன்ஹக் நகரிலுள்ள வைத்தியசாலையில் நேற்று (3) இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததோடு 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தெற்கு சூடான் மக்கள் பாதுகாப்புப்படை என்ற கிளர்ச்சி அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.