ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் 11-15 வரை நடைபெறவுள்ளது. இந்தப்போட்டியில் அவுஸ்திரேலிய – தென் ஆபிரிக்க அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.
அந்தவகையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:
டெம்பா பவுமா (கெப்டன்), டோனி டி ஜோர்ஜி, எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், லுங்கி நிகிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தென் ஆப்பிரிக்க அணியில் இந்தியாவின் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட செனுரன் முத்துசாமியும் உள்வாங்கப்பட்டுள்ளார்.
31 வயதான செனுரன் முத்துசாமியின் குடும்பம் தமிழ்நாட்டின் நாகபட்டினத்தைச் சேர்ந்தது என்பதால், அவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். இருப்பினும், செனுரன் தென் ஆபிரிக்காவில் பிறந்து அங்கேயே கிரிக்கெட் கற்றுக்கொண்டு தென் ஆபிரிக்க தேசிய அணியில் இடம் பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.