திருநங்கைகள் தொடர்பில் பாப்பரசரின் நிலைப்பாடு!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்.

தனது 88ஆவது வயதில் இன்று காலை வத்திகானில் உள்ள அவரது இல்லத்தில் மறைந்தார்.

சுவாசப் பாதையில் ஏற்பட்ட பூஞ்சை, பக்றீரியா மற்றும் வைரஸ் தொற்று காரணமாக பாப்பரசர் பிரான்சிஸ் தொடர் சிகிச்சை பெற்று வந்து, பின்னர் தொற்றில் இருந்து மீண்டு வந்த நிலையில் மறைந்திருக்கிறார்.

பாப்பரசர் பிரான்சிஸ், ரோம் நேரப்படி காலை 7:35 மணிக்கு உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடல் வத்திக்கானில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பலரையும் சோகத்தில் ஆழ்த்திச் சென்ற பாப்பரசரின் தெரியாத பக்கம்

இத்தாலியில் இருந்து அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகருக்கு இடம் பெயர்ந்த தம்பதியின் 5 குழந்தைகளில் ஒருவராக 1936 ஆம் ஆண்டு பிறந்த ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு, pleurisy என்ற அழற்சியால் 20 வயதிலேயே நுரையீரலின் ஒருபகுதி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் தனது கல்வியை தொடர்ந்த ஹோர்கே, வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

உடல் நலப் பாதிப்பு தந்த வெற்றிடமும் இயேசு கிறிஸ்து மீதான ஈர்ப்பும், இயேசு சபையில் 1958 ஆம் ஆண்டு அவரை இணைய வைத்தது.

யூனஸ் அயர்ஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றி , எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார். பேராயர் என்ற முறையில் அவருக்குப் பெரியதொரு மாளிகை இல்லமாக இருந்த போதிலும் அவர் ஒரு எளிய, சிறிய கட்டடத்தில் வாழ்ந்து வந்தார்.

தனி ஓட்டுநரைக் கொண்ட சொகுசு கார் தமக்கு அளிக்கப்பட்டபோதும் அது வேண்டாம் என கூறி பொது போக்குவரத்திலேயே பயணம் செய்தார். சமையலுக்கென்று தனி ஆள் வைக்காமல், அவர் தமக்கு வேண்டிய உணவைத் தாமே சமைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படி பொது வாழ்விற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஹோர்கே, 2013 ஆம் ஆண்டு 16ஆது போப் பெனடிக்ட் இராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருத்தந்தை அசிசியின் பிரான்சிசுவின் நினைவாக பிரான்சிஸ் என்பதை தனது ஆட்சி பெயராகவும் தெரிவு செய்தார். தென் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை பாப்பரசர் பிரான்சிஸ் ஆவார். இயேசு சபையிலிருந்து திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் இவர் ஆவார்.

மூன்றாம் கிரகோரிக்கு பின்பு ஆயிரத்து 200 ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு வெளியே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. இவர் தம் தாய்மொழியாகிய எசுப்பானியம், தம் பெற்றோரின் பூர்வீக மொழியான இத்தாலியம், இலத்தீன், செருமானியம், ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளை நன்கு பேச அறிந்தவர்.

அனைவரும் சமம் என்ற சமூகநீதி கொள்கைகளை கொண்ட பாப்பரசர் பிரான்சிஸ், எச்.ஐ.வி. உள்ளிட்ட பாதிப்புகளால் ஒதுக்கி தள்ளப்பட்ட நோயாளிகள் மீது பரிவு காட்டி வந்தார்.

2001இல் எய்ட்ஸ் நோயாளி ஒருவரின் இல்லம் சென்று, அங்கு அவரது கால்களை கழுவி முத்தமிட்டு, அவர்கள் மீதான தனது பரிவை வெளிப்படுத்தினார். அகதிகளுக்கும் புலம்பெயர்வோருக்கும் எப்போதும் தனது ஆதரவை வழங்கி வந்தார் போப் பிரான்சிஸ்.

போரில்லாத அமைதியான உலகிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பாப்பரசர் பிரான்சிஸ், உலகில் அடிமை முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

அதேசமயம், பெண்களின் சில குறிப்பிட்ட உரிமைகள் தொடர்பான பிரச்னையில் அடிப்படைவாத கொள்கை கொண்டவராக பாப்பரசர் பிரான்சிஸ் விமர்சிக்கப்பட்டார்.

திருமண முறிவு, கருக்கலைப்பு, கருத்தடைக்கான உரிமை உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டார்.

கருணைக் கொலை செய்வதைக் கடுமையாக எதிர்த்த பாப்பரசர் பிரான்சிஸ், திருநங்கை, திருநம்பி, ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளடக்கிய எல்ஜிபிஇடி அமைப்பின் செயல்பாடுகளை கடுமையாக எதிர்த்தார். அதே சமயம், அவர்களை கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.

இந்நிலையில், பாப்பரசர் பிரான்சிஸின் மறைவு உலகலாவிய மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி – News 18 English

 

donald-trump

ஈரானால் அதன் அணு ஆயுத கட்டமைப்பை சீரமைக்க முடியாது!

கடந்த 13ம் திகதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், அணு உலைகள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், மசகு

IMG-20250624-WA0013

“பிரஜாசக்தி” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஜூலை 04 ஆம் திகதி ஆரம்பம்!

சமூகத்தை வலுவூட்டல் மற்றும் பொருளாதார நன்மைகளை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுதலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “பிரஜாசக்தி” தேசிய

IMG-20250624-WA0012

வெலிகந்த, நெலும்வெவ வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பகுதியை அபிவிருத்தி செய்யத் திட்டம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, வெலிகந்த நெலும்வெவ பிரதேசத்தில் உள்ள வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பிரதேசத்தை அபிவிருத்தி