தமிழ் கடவுள் என போற்றப்படும் முருக பெருமானின் 6 படை வீடுகளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலும் ஒன்றாக திகழ்கிறது.
வரலாற்று சிறப்பு மிக்க முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் காணப்படுகிறது.
இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், ராஜகோபுர அடிவாரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் கடந்த 1-ந் திகதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தினமும் காலை, மாலை என ஒவ்வொரு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.