திசைகாட்டி அரசாங்கமும் எரிசக்தி மாபியாவையே முன்கொண்டு செல்கின்றது! – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

மக்கள் விடுதலை முன்னணி தற்போதைய அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்து, தற்போதுள்ள எரிபொருள் மாபியாவை மாற்றியமைத்து முறைமையில் மாற்றத்தை கொண்டு வருவோம் என்று உறுதியளித்திருந்தது. ஆனால் அந்த மாற்றம் வார்த்தைகளில் மட்டுமே உள்ளது.

எரிபொருள் ஆற்றல் மாபியாவை ஊக்குவிக்கும் நிலைக்கு வந்துள்ளது. கூரைகளின் மீது பொருத்தப்படும் சூரிய மின் தகடுகளுக்கான கட்டணம் ஒரு கிலோவாட் மணிக்கு ரூ.37 இல் இருந்து ரூ.20 ஆக 45% ஆல் குறைக்கப்பட்டுள்ளது.
இது சூரிய சக்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கை அல்ல. புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை நோக்கித் திரும்பும் பலரை அதனை விட்டும் விரட்டியடிக்கும் நடவடிக்கையாக அமைந்து காணப்படுகிறது.

அவ்வாறே இது எரிபொருள் ஆற்றல் மாபியாவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் அமைந்து காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

அவர் இன்று (21) விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை ஏராளமான சிறிய மட்ட தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சூரிய ஆற்றல் தொழில்முனைவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 1,000 தொழில் நடவடிக்கைகளில் பணிபுரியும் 40,000 க்கும் மேற்பட்ட மக்களை இந்த சூரிய சக்தி பேனல் கட்டணம் 45% குறைப்பு மோசமாகப் பாதித்துள்ளது. அவர்களின் தொழில்களும் கேள்விக்குறியாக மாறிவிட்டன. முழுத் துறையும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நமது நாடு எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தருணத்தில், 2024 ஆம் ஆண்டளவாகும் போது சூரிய மின்சக்தித் மூலம் நமது எரிசக்தி கட்டமைப்பிற்கு 500 மெகாவாட் பங்களிப்பு வழங்கப்பட்டன. 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதே அரசாங்கத்தின் அவா என்றாலும், தற்போதைய அரசாங்கம் சூரிய ஆற்றலையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியையும் அழித்து எரிபொருள்கள் மீதமைந்த எரிசக்தி மாபியாவை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இது முறைமையில் ஏற்படும் அல்லது ஏற்படுத்தப்பட்ட மாற்றமா? இல்லை. மாறாக தற்போதுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி மாபியாவை அவ்வாறே தொடரும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கும் ஒரு துறையை அழிக்க முயற்சிக்கிறார்கள்.

சூரிய சக்தி நாட்டிற்கு 20 ஆண்டுகளுக்கு நிதி நிலைத்தன்மையை பெற்றுத் தருகிறது. நீண்டகால சேமிப்பையும் கொண்டு வருகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த துறையாகவும் காணப்படுகின்றன. எரிபொருளை பயன்படுத்தும் போது நிதி நிலைத்தன்மையை கொண்டு வராது. சுற்றுச்சூழலுக்கும் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இயற்கை எரிவாயுவின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளன. அனல் மின் நிலையம் மற்றும் எரிபொருள் ஆற்றல்கள் மீது நாடு தங்கியிருக்குமானால் டொலர் செலவையும் எதிர்கொள்ளும். சூரிய சக்தி பயன்பாட்டால் உள்நாட்டு செலவு மட்டுமே காணப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
மக்களின் எரிசக்தி உரிமைக்காக நாம் முன்நிற்போம்.

உலக சந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ரூபாவின் பெறுமதியில் ஏற்படும் வீழ்ச்சி போன்ற பிரச்சினைகளுக்கு சூரிய சக்தி ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும். இது நாட்டிலிருந்து அந்நியச் செலாவணி வெளியேறுவதையும் குறைக்கும். எனவே தயவுசெய்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். எரிபொருள் மாபியாவுக்கு இடமளியாது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுங்கள். நட்பு வட்டார எரிபொருள் மற்றும் மின்சார மாபியாக்களுக்கு இந்த அரசாங்கமும் அடிமையாகி விட்டது. மக்களின் எரிசக்தி உரிமைகக்காக எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி என்றும் முன்நிற்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

07.17.01

ராஜபக்‌ஷர்களுடன் வம்பிலுத்த கனேடிய மாகாண முதல்வருக்கு கொலை மிரட்டல்!

பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டலுக்கு இலக்காகி இருந்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக