தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் சட்டமூலமத்தை கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தாய்ப்பால் ஊட்டும் குறி காட்டி தொடர்பில் இலங்கை மிகவும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதுடன், இலங்கை World Breastfeeding Trends Initiative (WBTI) அமைப்பினால் ‘Green Status’ வழங்கப்பட்ட நாடாகும்.
வர்த்தக ரீதியான குறிக்கோளை முன்னிலைப்படுத்தி பால்மா உற்பத்தித் தொழிற்றுறை மூலம் பிள்ளைகளுக்கு விடுக்கப்படும் ஒழுக்க நெறிக்கு முரணான மற்றும் பாதகமான தாக்கங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்து, பிள்ளைகளின் சுகாதார மற்றும் போசாக்கைப் பாதுகாப்பதும், விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ள பிரதான தலையீடாகக் கருதி தாய்ப்பால் ஊட்டுதலைப் பாதுகாப்பதாகும்.
தாய்ப்பால் ஊட்டுதல் தொடர்பான உலக முன்னோடி என்ற ரீதியில் இலங்கை பெற்றுள்ள மரியாதையைத் தொடர்ச்சியாகப் பேணுதலை உறுதி செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவிப்பதற்கான சட்டத்தின் மூலம் சட்ட ரீதியான ஏற்பாடுகளை அறிமுகம் செய்வதற்காக 2018-10-16 திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.