தாய்க்கு பதில் 8 வயது சிறுவனை கைது செய்த பொலிஸார் – முல்லைத்தீவில் சம்பவம்!

முல்லைத்தீவு – வெலிஓயா ஹேலஓவெவ கிராமத்தில் , பிடியாணைபிறப்பிக்கப்பட்டுள்ள பிணையாளியான தாயை கைது செய்வதற்காக சென்றிருந்த போது,அத்தாய் இன்மையால், அவருடைய எட்டு வயது பாடசாலை மாணவனை கைது செய்த சம்பவத்தில் பொலிஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிறுவனை கைது செய்து , பொலிஸில் இரவுநேரத்தில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பில், வெலிஓயா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்குநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.

தவிய சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் ஆஜராகுமாறு, கெப்பத்திகொல்லாவ நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க கட்டளையிட்டுள்ளார்.

இந்தசம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறு முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

சிறுவனின் பாதுகாப்பு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அதன் அறிக்கையையும்சமர்ப்பிக்குமாறு நன்னடத்தை அதிகாரிக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

வெலிஓயா ஹேலஓவெவ கிராமத்தில் சந்தேக நபர் ஒருவருக்கு பிணையாளியாக நின்ற, சந்தேகநபரின் மனைவிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டமையால் கைது செய்வதற்கு பொலிஸார் சென்றிருந்துள்ளனர்.

அப்போது அந்த பெண் இன்மையால், அந்த பெண்ணின் 8 வயது மகனை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்குஅழைத்து வந்துள்ளனர். பொலிஸாரின் நடவடிக்கை சிறுவனின் உரிமையை மீறியுள்ளது.

ஆகையால், சிறுவனுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் குழு, நீதிமன்றத்தில்கோரி நின்றது. இதனையடுத்தே, நீதவான் மேற்கண்டவாறு கட்டளையிட்டுள்ளார்.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு