தமிழ்நாட்டில் வெற்றிடமாகவுள்ள 06 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் 19 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அன்று காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளதுடன் மாலை 05 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணி, வைகோ, அப்துல்லா , வில்சன், சண்முகம், சந்திரசேகர் ஆகிய 06 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
ஜூன் 02 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என்பதுடன் ஜூன் 10 ஆம் திகதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.