தமிழ்நாட்டிலிருந்து தாயகம் வந்தவர்கள் கைது!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்களையும் அவர்களை படகில் அழைத்து வந்த இரு படகோட்டிகளையும் விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நால்வரும் இந்தியாவில் இருந்து மீண்டும் இலங்கைக்கு கடந்த வியாழக்கிழமை சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக திரும்பியுள்ளனர்.

அவர்கள் நால்வரையும் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த இரண்டு படகோட்டிகள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று அழைத்து வந்துள்ளனர்.

தகவல் அறிந்த பொலிஸார் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் புகுந்த நால்வரையும் , அவர்களை அழைத்து வந்த படகோட்டிகளையும் கைது செய்து , வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் பருத்தித்துறை நீதிமன்றில் ஆறு பேரையும் முற்படுத்திய போது , அவர்களை 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை , இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய நால்வரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் மன்று பணித்துள்ளது .

Modi (1)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப்

495270405_919110200343581_3972143963487025502_n

கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்!

எகொட உயன பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்று மீள கரைக்குத் திரும்பிய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு

btOCP9w

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான பொறிமுறை குறித்து கலந்துரையாடல்!

இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு