தமிழரசுக்கட்சி ஜேவிபியின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை வரவேற்கிறது!

ஜேவிபி பிழையாக நடக்கிறது என விமர்சிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சி, அந்த ஜேவிபியின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை வரவேற்கிறது என, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – களுவன்கேணி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதாகக் கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நல்லாட்சி அரசாங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு தொடர்பான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை நாடாளுமன்றில் நிறைவேற்றவுள்ளதாகக் கூறுகிறது.

இதன் உள்ளடக்கங்கள் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் உள்ளடக்கங்களைக் காட்டிலும் மிகவும் மோசமானதொன்றென அதனை ஆராய்ந்தபோது தெரியவந்துள்ளது.

எனவே, தமிழ்த் தேசியத்தைப் பாதுகாப்பதாகக் கூறும் சுமந்திரனின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி, இத்தகையதொரு அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க