“தக் லைப்” ஓடிடி ரிலீஸ் : கமலின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்!

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் ‘தக் லைப்’ படம் உருவாகியுள்ளது. இதில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

‘தக் லைப்’ படக்குழு தற்போது மும்பையில் புரமோசன் பணியில் ஈடுபட்டுள்ளது. அப்போது பேசிய கமல்ஹாசன் , தக் லைப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்தார்.அதன்படி, ‘தக் லைப்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கு 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும் என கமல்ஹாசன் கூறினார். மேலும், இந்த முடிவை எந்த தயக்கமும் இல்லாமல் நெட்பிளிக்ஸ் ஏற்றுக்கொண்டதாகவும், இதுதான் திரைத்துறைக்கு ஆரோக்கியமான போக்கு எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில் ‘தக் லைப்’ பட ஓடிடி வெளியீடு 8 வாரங்களுக்கு பிறகு அறிவிக்கப்படும் என்ற முன்னெடுப்புக்காக நடிகர் கமலஹாசனுக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இந்த முடிவை அனைத்து தயாரிப்பாளர்களும் அனைத்து படங்களுக்கும் இதனை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Modi (1)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப்

495270405_919110200343581_3972143963487025502_n

கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்!

எகொட உயன பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்று மீள கரைக்குத் திரும்பிய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு

btOCP9w

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான பொறிமுறை குறித்து கலந்துரையாடல்!

இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு