ட்ரம்பின் கருத்தை மறுக்கும் இந்தியா!

இந்தியா –பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், “இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ட்ரம்ப் கூறியதாவது

இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதனால் பல இலட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உட்பட நிறைய உதவிகளை செய்தோம். போரை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம். வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், வர்த்தகத்தை நிறுத்திவிடுவேன் எனக் கூறி இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளதற்கு இந்தியா அதிகாரபூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால்,

“ஒபரேஷன் சிந்தூர் தொடங்கியதில் இருந்து இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க மற்றும் இந்திய தலைவர்கள் இடையே அவ்வப்போது உரையாடல் நடந்தது. ஆனால் அவற்றில் வர்த்தகம் தொடர்பான பேச்சே எழவில்லை” என்று தெரிவித்தார்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த