டொராண்டோ (Toronto) நகரில் வெப்ப அலை தொடரும் நிலையில், டொராண்டோ மாவட்ட பாடசாலைகள் குழுமம் (TDSB) பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி சில பாடசாலைகளில் “அசௌகரியமான சூழ்நிலைகள்” ஏற்படக்கூடுமென எச்சரித்துள்ளது.
திங்களன்று வெப்பநிலை 36°C வரை செல்லக்கூடும் என்பதோடு ஈரப்பதம் காரணமாக அது 46°C ஆக உணரப்படலாம் என கனடா சுற்றாடல்துறை (Environment Canada) அறிவித்துள்ளது.
வெப்பச்சூழ்நிலை காரணமாக பாடசாலைகளை மூடுவது வழக்கமான நடைமுறை அல்ல என்பதையும் TDSB வலியுறுத்தியுள்ளது.
இந்த வெப்ப அலை, இதுவரையில் இல்லாத வகையில் டொராண்டோவில் புதிய வெப்ப நிலைமைகளை பதிவு செய்யலாம் என்பதோடு, பருவகாலத்தின் தொடக்க வெப்பம் என்பதால், உடல்நலத்திற்கு ஆபத்தானது என்றும் கூறப்படுகிறது.