டொரண்டோ, ஒன்ராறியோ பகுதிகளுக்கு வெப்பநிலை அதிகரிப்பு எச்சரிக்கை

இந்த வார இறுதியில் டொராண்டோ மற்றும் தெற்கு ஒன்ராறியோவின் பெரும்பகுதிக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை காணபப்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கனடா சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த எச்சரிக்கையை வெளியிட்டது.

‘சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பகல்நேரத்தில் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை காணப்படும்.

கடுமையான வெப்பம் அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் எனவே உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என்று தேசிய வானிலை முகவர் நிறுவனம் எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன் சனிக்கிழமை இரவு வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை மாத்திரமே குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வெப்பம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களை நீரேற்றத்துடன் இருக்கவும், கிடைத்தால் ஏசியை பயன்படுத்தவும், சூரிய ஒளியில் நேரடியாக செல்வதை தவிர்க்குமாறும் வெளிப்புற செயல்பாடுகளை காலை அல்லது மாலை வேளைகளுக்கு மட்டுப்படுத்தவும் வலியுறுத்தபட்டுள்ளது.

07.17.01

ராஜபக்‌ஷர்களுடன் வம்பிலுத்த கனேடிய மாகாண முதல்வருக்கு கொலை மிரட்டல்!

பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டலுக்கு இலக்காகி இருந்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக