பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவின் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே பல அமைப்புகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம் , அட்டாரி – வாகா எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் வரத் தடை, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடல் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.