டெக்ஸாஸ் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர் .மேலும் 25 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர தினத்தன்று நடந்த இந்த துயரச் சம்பவம் “அதிர்ச்சியூட்டுவதாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளித்து வருவதாக டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் கூறியுள்ளார்.

இதேநேரம் இரவு முழுவதும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை இடம்பெற்று வருகிறது, இருப்பினும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை டெக்சாஸ் அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை.

நதியில் வெள்ளம் வருவதற்கு முன்பு நீர் மட்டம் விரைவாக உயர்ந்தது. “45 நிமிடங்களுக்குள், குவாடலூப் நதி 26 அடி உயர்ந்தது, இது ஒரு அழிவுகரமான வெள்ளம் என்று டெக்சாஸ் பதில் ஆளுநர் டோன் பெட்ரிக் குறிப்பிட்டிருந்தார்.

இதுவரை மொத்தம் 237 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 24 பேரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

07.17.01

ராஜபக்‌ஷர்களுடன் வம்பிலுத்த கனேடிய மாகாண முதல்வருக்கு கொலை மிரட்டல்!

பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டலுக்கு இலக்காகி இருந்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக