தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான அஜித், பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான “விடாமுயற்சி” படத்தின் மூலம் திரைக்கு வர இருக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் நடிக்கும் “Good Bad Ugly” திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
சமீபத்தில், அஜித் துபாயில் நடைபெற்ற ஒரு கார் ரேஸில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றார்.
ஒரு காலத்தில், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை காட்சிகள் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், சில ஆண்டுகளாக அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை, இதனால் படத்தின் வசூல் குறைந்துவிட்டது.
இந்நிலையில், கோலிவுட்டில் புதிய ஒரு டிரெண்ட் உருவாகியுள்ளது. அதாவது, படம் நாளை வெளியாவதாக இருந்தால், அதற்கான ப்ரீமியர் காட்சியை முந்தைய நாள் இரவில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் அஜித் நடிக்கும் “குட் பேட் அக்லி” படத்தின் ப்ரீமியர் ஷோ வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி இரவு திரையிடப்பட உள்ளது.