டிரானும் தேசபந்துவும் என்னிடம் 30 கோடிகளை கேட்டனர் – ஹரக் கட்டா!

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர், பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவரான ஹரக் கட்டாவிடம் 30 கோடி ரூபா பணம் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஹரக் கட்டா, வழக்கு விசாரணைக்காக இன்றையதினம் பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறிச் செல்லும் போது, ஊடகங்களைப் பார்த்து மேற்கூறிய கருத்தை சொல்லிச் சென்றுள்ளார்.

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு 30 கோடி ரூபா பணத்தினைக் கொடுக்காத காரணத்தினால் தான் தங்காலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஹரக் கட்டா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பணத்தினைக் கொடுக்காத காரணத்தினால், கோடி ரூபா செலவிட்டு தன்னை தடுத்து வைத்திருப்பதாகவும் ஹரக் கட்டா குறிப்பிட்டார்.

தங்காலையில் தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்கு மாதத்திற்கு 10 மில்லியன் ரூபா செலவாகும் என்றும் ஹரக் கட்டா தெரிவித்துள்ளார்.

மேலும், வெளியில் சொல்ல வேண்டிய பல விடயங்கள் இன்னும் உள்ளன. அவற்றை எல்லாம் விரைவில் நான் வெளிப்படுத்துவேன் என்றும் ஹரக் கட்டா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை விடுவிப்பதற்கு பேரம் பேசப்பட்டிருக்கலாம் என்றும் அது தொடர்பிலேயே ஹரக் கட்டா இன்று இவ்வாறு கருத்தினை வெளியிட்டுச் சென்றிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த