டான் பிரியசாத் சுட்டுக்கொலை – முக்கிய சந்தேகநபர் சிக்கினார்!

டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

“நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளரும் அரசியல் ஆர்வலருமான டான் பிரியசாத் செவ்வாய்க்கிழமை (22) மாலை வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த செவன’ வீட்டு வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தகவல்களின்படி, அவர் முதலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

பிரியசாத் மீது நான்கு முறை சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது, மார்பில் இரண்டு முறையும் தோளில் இரண்டு முறையும் சுடப்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும், இந்த சம்பவத்தின் போது சிறிய காயங்களுக்கு ஆளான மற்றொரு நபரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், துப்பாக்கிச் சூடுகளை நடத்தி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்