ஜம்மு – காஷ்மீர் தாக்குதல் : மோடி காட்டம்

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனையைப் பெறுவார்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் (22) தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிகார் மாநிலம் மதுபானி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திய பிரதமர் மோடி, பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

“இன்று பிகார் மண்ணில் இருந்து உலகத்திற்கே ஒன்று கூறுகிறேன். ஒவ்வொரு தீவிரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா அடையாளம் கண்டு கண்டுபிடித்துத் தண்டிக்கும். பூமியின் எல்லைகள் வரை அவர்களை துரத்திப் பிடிப்போம்.

தீவிரவாதத்தால் இந்தியாவின் உணர்வு ஒருபோதும் உடைபடாது. தீவிரவாதம் தண்டிக்கப்படாமல் இருக்காது. நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்தத் தீர்மானத்தில் முழு தேசமும் ஒன்றுபட்டுள்ளது. மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் நம்முடன் இருக்கின்றனர். பல்வேறு நாடுகளின் மக்களுக்கும் தலைவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

இந்த தீவிரவாதத் தாக்குதலால் ஒட்டுமொத்த தேசமும் வருத்தத்தில் உள்ளது. இந்த தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகளும், இந்த சதியில் ஈடுபட்டவர்களும் அவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெரிய தண்டனையைப் பெறுவார்கள் என்பதை நான் மிகத் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன்.

140 கோடி இந்தியர்களின் மன உறுதி தீவிரவாதத்தை இருந்தஇடம் தெரியாமல் ஆக்கிவிடும்” என்று பேசியுள்ளார்.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு