அமெரிக்க தலையீட்டுடன் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் போர் நிறுத்தம் அமுலாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஜம்முவில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அத்துமீறல் தொடர்பில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாஹ் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.