ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கைகள்; உண்மை எது?

நிதி மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற நபருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் நிதி மோசடியில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட டபிள்யூ எச். அதுல திலகரத்ன என்பவருக்கு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய செய்தி, நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் உத்தியோகபூர்வ ஜனாதிபதி மன்னிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப” இந்த விடுதலை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளது.

ஜனாதிபதி தரப்பினதும் சிறைச்சாலை திணைக்களத்தினதும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்கள் மக்களில் குழப்பத்தையும் நம்பிக்கையிழப்பையும் உருவாக்குகின்றன. மன்னிப்பின் சட்டப்பூர்வ நிலை பற்றி தெளிவாக தகவல் இல்லாத சூழ்நிலையில், மக்கள் யாரை நம்புவது?

சட்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பாதுகாப்பது அரசின் பொறுப்பு. குற்றங்களை விட, அவற்றை மறைத்தல் மிகப்பெரிய சமூகத் தீமையாகும்.

எனவே, இந்த விடுதலைக்கான முழுமையான ஆதாரங்களும், தீர்மானங்களும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெளிவுபடுத்தப்பட வேண்டும்- என்று நிசாம் காரியப்பர் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

Modi (1)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப்

495270405_919110200343581_3972143963487025502_n

கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்!

எகொட உயன பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்று மீள கரைக்குத் திரும்பிய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு

btOCP9w

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான பொறிமுறை குறித்து கலந்துரையாடல்!

இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு