ஜனாதிபதி அநுரவின் கையெழுத்தால் விபரீதம்!

சிறைக்கைதி ஒருவரின் பொதுமன்னிப்பு விவகாரம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்கத் தவறியதாக பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து நாமல் ராஜபக்க்ஷ தனது எக்ஸ் தளத்தில், கையெழுத்திடுவது அவருக்கு புரியவில்லை
ஜனாதிபதியின் செயலால் ஏற்பட்ட தவறுக்கு அவர், அரசாங்க அதிகாரிகளையோ அல்லது சிறைத்துறையையோ குற்றம் சொல்ல முடியாது. ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தனது கையெழுத்து தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூற முடியாது.

அவர் கையெழுத்திடுவது அவருக்கு புரியவில்லை என்றால், அது நிதி, பாதுகாப்பு மற்றும் இராஜதந்திரம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் உட்பட முழு நாட்டையும் ஆபத்தில் ஆழ்த்துகிறதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

இதனை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. எனவே ஜனாதிபதி அல்லது அவரது செயலாளர் முழு பொறுப்பையும் ஏற்பதுடன் யாராவது பதவி விலக வேண்டும் எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.

இதில் நிதி மோசடிக்காகத் தேடப்படும் நபர் ஒருவர் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நீதி அமைச்சகம் பட்டியலை அங்கீகரித்த நிலையில், கையெழுத்திடும் முன் அதன் உள்ளடக்கத்தை மறுபரிசீலனை செய்து புரிந்துகொள்வது ஜனாதிபதியின் கடமை என்றும் பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் தெரிவித்துள்ளார்.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு