யாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் மன்றத்தின் 80 ஆவது ஆண்டு அமுத விழா நிறைவை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் மன்றம் முதன் முதலாகப் பட்டத் திருவிழாவை செம்மணி வயல் வெளியில் நடத்தியது.
பெரும் எண்ணிக்கையான பட்டங்கள் போட்டியில் கலந்து கொண்டன. பட்டத்திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் அவர்களின் முயற்சிக்கும் நல்லூர் சங்கிலியன் மன்றம் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.